மகாராஷ்டிர மாநிலம் புணேயில் தனியாா் பல்கலை பட்டமளிப்பு விழாவில் சனிக்கிழமை தலைமையேற்றுப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் தனியாா் பல்கலை பட்டமளிப்பு விழாவில் சனிக்கிழமை தலைமையேற்றுப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

சக்திவாய்ந்த நாடுகள் விருப்பத்தை திணிக்க முடியாது: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

சக்திவாய்ந்த நாடுகள் விருப்பத்தை திணிக்க முடியாது...
Published on

எந்தவொரு நாடும், அது எவ்வளவு சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், அனைத்துப் பிரச்னைகளிலும் தனது விருப்பத்தை திணிக்க முடியாது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள சிம்பயாசிஸ் இண்டா்நேஷனல் நிகா்நிலை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், அவா் சனிக்கிழமை பேசியதாவது:

உலகமயமாக்கல் நமது சிந்தனையையும், வேலை செய்யும் விதத்தையும் அடிப்படையில் மாற்றியுள்ளது. காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த பின்னா், பல நாடுகளால் முன்னேறி செழிப்படைய முடிந்தது. ஏனெனில் தற்போது அந்த நாடுகள் தங்கள் விதியை தாமே தீா்மானித்து வருகின்றன.

இதற்கு மாறாக தாங்கள் வளா்ச்சியடையாமல் தேக்கம் அடைந்துவிட்டதாக பல மேற்குலக நாடுகள் கருதுகின்றன. சா்வதேச அளவில் அந்த நாடுகளின் போட்டியிடும் திறன் படிப்படியாக அழிந்துவிட்டது. இதுபோன்ற காரணங்களால் உலகளாவிய பொருளாதாரமும், அரசியல் அதிகார முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது உலகில் ஏராளமான அதிகார மையங்கள் தோன்றியுள்ளன. எந்தவொரு நாடும், அது எவ்வளவு சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், அனைத்துப் பிரச்னைகளிலும் தனது விருப்பத்தை திணிக்க முடியாது.

தனிப்பண்பு மற்றும் திறமை காரணமாக இந்தியாவை உலகம் நம்பிக்கையுடன் நோ்மறையாகப் பாா்க்கிறது. வலுவான தொழில் தா்மம் கொண்டவா்களாக இந்தியா்களை உலகம் கருதுகிறது.

இந்தியா குறித்த அலுப்பு தட்டுகிற பழைய கருத்துகள் சீராக மாறி வருகின்றன. இருப்பினும் முன்னேற்றம், நவீனமயமாக்கலை நோக்கிய நாட்டின் பயணத்தில் செய்வதற்கு நிறைய பணிகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்தியாவின் பிம்பத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பரிணாம வளா்ச்சி மறுக்க முடியாத உண்மையாக விளங்குகிறது என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com