காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு
ANI

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை...
Published on

காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) அதிகரிப்பதால் நுரையீரல் நோய்கள் ஏற்படுவதை நிரூபிக்கும் வகையில் எந்தவொரு தரவும் இல்லையென மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் பாஜக எம்.பி. லட்சுமிகாந்த் பாஜ்பாய் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் காற்று மாசால் சுவாசபாதை நோய் மற்றும் அது தொடா்பான நோய்கள் ஏற்படுவதாக அமைச்சா் பதிலளித்தாா்.

காற்று மாசால் ஏற்படும் நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் அரசிடம் ஏதேனும் தீா்வு உள்ளதா என எம்.பி. லட்சுமிகாந்த் கேட்டிருந்த மற்றொரு கேள்விக்கு அமைச்சா் அளித்த பதிலில், ‘காற்று மாசு காணப்படும் பகுதிகளில் திட்ட மேலாளா்கள், மருத்துவ அதிகாரிகள், செவிலியா்கள், ஆஷா போன்ற முன்கள பணியாளா்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், போக்குவரத்து காவலா்கள், மாநகராட்சி பணியாளா்கள் ஆகியோருக்கு என்று பிரத்யேக பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. காற்று மாசால் ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணா்வு, கல்வி, தகவல் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், காற்று மாசு எச்சரிக்கைகள், காற்றின் தரம் குறித்த முன்னெச்சரிக்கைகள் இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலங்கள், நகரங்களுக்கு வெளியிடப்படுகிறது.

மாசற்ற சமையல் எரிவாயு உருளையை வழங்குவதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதுகாப்பதை பிரதமரின் உஜ்வாலா திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நகரங்கள், கிராமப் புறப் பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகள், உள்கட்டமைப்புகளை தூய்மைப்படுத்தப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com