

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்ட வரலாற்றை இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற உலக இந்து பொருளாதார மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "பொருளாதாரமே வலிமையைத் தரும். முழுமைபெற்ற நபரை யாராலும் பார்க்க முடியாது. சிலர் பணம் சம்பாதிப்பர்; ஆனால், அமைதி இருக்காது.
கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், குறிப்பாக 10 ஆண்டுகளின் வேகம் - இந்தியாவை உலகுக்கே ஒரு முன்மாதிரியாக மாற்றியுள்ளது.
தங்கள் நாடு எவ்வாறு செயல்பட்டது? இந்து வளர்ச்சியின் விகிதம் என்ன? பல ஆண்டுகளாக இந்திய கலாசாரம் எவ்வாறெல்லாம் அவமதிக்கப்பட்டது? என்பதையெல்லாம் அறியாத இளைஞர்கள், வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.