

தில்லியில் விமான சேவை பாதிப்பு :
தில்லி விமான நிலையத்தில் அடர் பனிமூட்டத்தால் 500க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை பாதிக்கப்பட்டன.
தில்லி உள்பட வட மாநிலங்களின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு நிலவும் சூழலில் பனிமூட்டமும் அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தில்லியில் பரவலாக காற்றின் தரம் மிக மோசம் என்ற பிரிவில் காற்றின் தரம் நிலவுகிறது.
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 1,300 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், அடர் பனிமூட்டம் காரணமாக கடந்த சில நாள்களாக விமான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையால் தில்லி விமான நிலையத்தில் திங்கள்கிழமை(டிச. 22) 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.