

சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ளூர் பாஜக தலைவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கட்ஹோரா பகுதியில் உள்ள கேஷ்லா கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டுமான ஒப்பந்ததாரரும், கட்ஹோரா ஜனபத் பஞ்சாயத்து உறுப்பினருமான அக்ஷ்ய் கார்க், நடைபெற்றுவரும் சாலை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய சென்றிருந்தபோது முகமூடி அணிந்த மூன்று பேர் அவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாக கோர்பா காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் திவாரி தெரிவித்தார்.
முதற்கட்ட தகவல்களின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் கருப்பு காரில் வந்து கொடூரமான தாக்குதலை மேற்கொண்டனர். அக்ஷ்ய் கார்க் பலத்த காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிய காவல்துறை சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளது. கொலைக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களும், ஏராளமான ஆதரவாளர்களும் மருத்துவமனைக்கு வெளியே திரண்டனர். பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அங்கு காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.