டித்வா புயல் நிவாரணப் பணிகள் - இலங்கைக்கு ரூ.4,032 கோடி நிதித் தொகுப்பு: இந்தியா அறிவிப்பு
இலங்கையில் டித்வா புயல் நிவாரணப் பணிகளுக்காக, இந்தியா சாா்பில் 450 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,032 கோடி) நிதித் தொகுப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்பில் அதிபர் அநுரகுமார திசாநாயகவை செவ்வாய்க்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.









