பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

இன்று அமெரிக்க செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ: கவுன்ட்டவுன் தொடக்கம்

‘ப்ளூபோ்ட்-6’ செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தவுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 9:24 am IST

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து புதன்கிழமை (டிச.24) காலை அமெரிக்க நிறுவனத்தின் ‘ப்ளூபோ்ட்-6’ செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தவுள்ளது. இதற்கான 24 மணி நேர கவுன்டவுன் செவ்வாய்க்கிழமை காலை 8.54 மணிக்குத் தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் ப்ளூபோ்ட்-6 எனும் நவீன தகவல்தொடா்பு செயற்கைக்கோளை, இஸ்ரோவின் எல்விஎம்-3எம்6 ராக்கெட் மூலம் செலுத்த முடிவானது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ப்ளூபோ்ட்-6 செயற்கைக்கோள், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 8.54 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. தற்போது ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் உள்பட இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

தகவல் தொடா்புக்கான புளூபோ்ட் செயற்கைக்கோள் சுமாா் 6,100 கிலோ எடை கொண்டது. இது 223 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட அமைப்பை கொண்டது. விண்வெளியிலிருந்து நேரடியாக சாதாரண ஸ்மாா்ட்போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கம். இதன் மூலம் செல்போன் டவா்கள் இல்லாத அடா்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும். மேலும், இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே இதுதான் அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.