ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை: காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜிஎஸ்டி விதிக்கலாமா? - நீதிமன்றம்

காற்று சுத்திகரிப்பான் ஜிஎஸ்டியைக் குறைக்காதது ஏன்? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை: காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜிஎஸ்டி விதிக்கலாமா? - நீதிமன்றம்
PTI
Updated on
1 min read

புது தில்லி: ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை என்றும் காற்று சுத்திகரிப்பான் மீதான ஜிஎஸ்டியை குறைக்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது. காற்று மாசுபாட்டைச் சுட்டிக்காட்டி தொடரப்பட்ட பொதுநல மனு ஒன்றின் மீதான விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை(டிச. 24) நடைபெற்றது.

இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு மற்றும் மனுதாரர் தர்ப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி கெடேலா குறிப்பிடும்போது, “ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை. அதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையாக நீங்கள் (அரசு) காற்று சுத்திகரிப்பான்களை வழங்கலாம். அதையும் செய்ய் முடியவில்லையெனில், அதன் மீதான ஜிஎஸ்டியையாவது குறைக்கலாமே” என்று சுட்டிக்காட்டினார்.

அதனைத்தொடர்ந்து, இவ்விவகாரத்தில் விரைவில் ஜிஎஸ்டி கவுன்சிலைக் கூட்டி முடிவெடுக்க அறிவுறுத்தியதுடன் மத்திய அரசிடம் மனு விவகாரத்தில் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Summary

Delhi HC to hear plea seeking lower GST on Air Purifiers on Dec 26

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com