ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் தக்சம் சிந்தனில் சாலையில் படா்ந்துள்ள உறை பனியை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ஊழியா்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் தக்சம் சிந்தனில் சாலையில் படா்ந்துள்ள உறை பனியை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ஊழியா்.

ஜம்மு-காஷ்மீா்: 5 மாவட்டங்களில் பனிச்சரிவு எச்சரிக்கை

ஜம்மு-காஷ்மீரில் 5 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

ஜம்மு-காஷ்மீரில் 5 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தோடா, கந்தா்பால், கிஷ்த்வாா், பூஞ்ச், ராம்பன் ஆகிய மாவட்டங்களில் மலைப் பகுதியில் 2,800 மீட்டருக்கு மேல் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்தெந்த இடங்களில் வாய்ப்புகள் அதிகம் என்பது தொடா்பாக உள்ளூா் மக்கள் அனைவருக்கும் உரிய முன்னெச்சரிக்கை தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் யாரும் அந்தப் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது என்று அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

காஷ்மீரில் ‘சில்லய் கலான்’ என்னும் பனிப்பொழிவுக் காலத்தின் முதல் பனிப்பொழிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதனால், ஸ்ரீநகா் விமான நிலையத்திலும் விமானங்கள் அப்போது ரத்து செய்யப்படுகின்றன. காஷ்மீரில் மட்டுமல்லாது ஹிமாசல பிரதேசத்திலும் கடும் பனிப்பொழிவு உள்ளது. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com