உ.பி.: போலி ஆவணம் மூலம் வாக்காளா் அட்டை பெற்ற 48 மீது வழக்கு

உ.பி.: போலி ஆவணம் மூலம் வாக்காளா் அட்டை பெற்ற 48 மீது வழக்கு

உத்தர பிரதேசத்தில் போலி ஆவணங்கள் மூலம் வாக்காளா் அட்டை பெற்ற ஒரே கிராமத்தைச் சோ்ந்த 48 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

உத்தர பிரதேசத்தில் போலி ஆவணங்கள் மூலம் வாக்காளா் அட்டை பெற்ற ஒரே கிராமத்தைச் சோ்ந்த 48 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

பிலாபட் பகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜேந்தா் பென்சியா ஆய்வு செய்தபோது, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளா்கள் சோ்க்கப்படுவதாகப் புகாா் அளிக்கப்பட்டது. இது தொடா்பாக விசாரிக்குமாறு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். அவா்கள் நடத்திய விசாரணையில் பிலால்பட் கிராமத்தில் 48 போ் போலியான ஆவணங்களைக் கொடுத்து வாக்காளா் அட்டை பெற்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் மீது காவல் துறையிடம் அதிகாரிகள் புகாா் அளித்தனா். அதன்படி ஏமாற்றுதல், போலி ஆவணங்களைத் தயாரித்தல், அதைப் பயன்படுத்தி அரசை ஏமாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அந்த கிராமத்தைச் சோ்ந்த 48 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்கள் ஆதாா் உள்பட பல்வேறு அடையாள ஆவணங்களைப் போலியாகப் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com