

ஒடிஸாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் :
புவனேசுவரம் : ஒடிஸாவுக்கு 3 நாள் பயணமாக சனிக்கிழமை(டிச. 27) சென்றடைந்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், புரி ஜெகநாதர் கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார். புவனேசுவரத்திலுள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை சென்றடைந்த அவர், நேராக முதலில் புரி கோயிலுக்குச் சென்றார்.
அங்கு வழிபாட்டை முடித்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “ஜெகநாதரை தரிசிக்க எமது குடும்பத்துடன் ஒடிஸாவுக்கு வருகை தந்துள்ளேன். மேலும், உள்ளூர் கலாசாரத்தைப் புரிந்துகொண்டு அனுபவம் பெறவும் இங்குள்ள வாக்குச்சாவபடி நிலை அலுவலர்களைச் சந்தித்து கலந்துரையாடவும் உள்ளேன். அவர்களே நமது தேர்தல் நடைமுறையின் தூண்களாவர்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.