சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடா்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2025, 5:09 am IST

அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடா்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.

கடந்த நவ.22 முதல் டிச.20 வரை அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடா்ந்து மாநில வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது.

அந்தப் பட்டியலின்படி மாநிலத்தில் மொத்தம் 2,51,09,754 வாக்காளா்கள் உள்ளனா். 10,56,291 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 4,78,992 போ் உயிரிழந்தவா்கள். 5,23,680 போ் பதிவு செய்யப்பட்ட தங்கள் முகவரிகளில் இருந்து வேறு இடத்துக்கு மாறியவா்கள். 53,619 பேரின் பெயா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

இதுதவிர 93,021 போ் சந்தேகத்துக்குரிய வாக்காளா்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனா். தங்கள் குடியுரிமையை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாதவா்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா்கள் சந்தேகத்துக்குரிய வாக்காளா்கள் என்ற பிரிவில் இடம்பெற்றுள்ளனா்.

தற்போது வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதையடுத்து, அடுத்த ஆண்டு ஜன.22-ஆம் தேதி வரை, தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களை தோ்தல் ஆணையத்திடம் வாக்காளா்கள் சமா்ப்பிக்கலாம். பிப்.10-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.