

சல்மான் கானை நேரில் வாழ்த்திய தோனி :
நடிகர் சல்மான் கான் தமது 60-ஆவது பிறந்தநாளை சனிக்கிழமை(டிச. 27) கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன.
இதனிடையே, தமக்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சல்மான் கான் வெள்ளிக்கிழமை இரவில் மும்பை அருகேயுள்ள பன்வேலிலுள்ள தமது பண்ணை வீட்டில் பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
பிறந்தநாள் விழாவில் அவரது அழைப்பை ஏற்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தமது குடும்பத்துடன் கலந்துகொண்டதையும் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். அப்போது சல்மான் கானும் தோனியும் சேர்ந்து நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் விடியோக்களும் சமூக ஊடகத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
திரையுல பிரபலங்கள் சஞ்சய் தத், கரீஷ்மா கபூர், ஜெனிலியா தேஷ்முக், ரகுல் ப்ரீத் சிங், ஹூமா குரேஷி, பிரக்யா ஜெய்ஸ்வால் உள்பட பல நடிகர், நடிகைகளும், விஐபிக்கள் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சல்மான் கான் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.