

உன்னாவ் வழக்கு - சிபிஐ மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை :
உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம்சுமத்தப்பட்ட குல்தீப் சிங்குக்கு தண்டனையை நிறுத்தி வைத்து தில்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு திங்கள்கிழமை (டிச. 29) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை (அப்போது அவருக்கு 17 வயது) செங்கா் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே, டிசம்பா் 2019-இல் விசாரணை நீதிமன்றத்தால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு முடிவடையும் வரை, செங்கரை ஜாமீனில் விடுவிக்க தில்லி உயா்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருப்பது நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, குல்தீப் சிங் செங்கரின் ஆயுள் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் நிறுத்திவைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, வழக்குகளை விசாரித்த சிபிஐ தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.