உ.பி.யில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது வெடி விபத்து: 4 வீரர்கள் காயம்

உத்தரப் பிரதேசத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 வீரர்கள் காயமடைந்தனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 வீரர்கள் காயமடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், பாத்கலா பயிற்சி மைதானத்தில் சனிக்கிழமை மாலை வழக்கமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நிகழ்ந்த வெடி விபத்தில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறுகையில், திடீரென ஒரு வெடிப்பு ஏற்பட்டது. இதில் நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலை மோசமாக இருந்ததால், அவர்கள் பின்னர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

காயமடைந்த ராணுவ வீரர்கள் சுரேஷ் (45), பவித்ரா (35), தீபக் (27) மற்றும் பிரவீன் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் தீபக் மற்றும் சுரேஷ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிப்புக்கான காரணத்தை கண்டறியவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தகவல் கிடைத்ததும் மிர்சாபூர் மற்றும் பெஹத் பகுதிகளைச் சேர்ந்த போலீஸ் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் காயமடைந்த வீரர்களை மீட்டு பெஹத் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர்கள் கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Four Army personnel were injured after an explosion occurred during firing practice at the reserved Badkala firing range here, police said on Sunday.

கோப்புப்படம்.
சத்தீஸ்கரில் தாயின் சடலத்துடன் 20 நாள்கள் வாழ்ந்த இளைஞரால் பரபரப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com