சிறுபான்மையினா் துன்புறுத்தல்: பாகிஸ்தான் கருத்துக்கு இந்தியா மறுப்பு
dot com

சிறுபான்மையினா் துன்புறுத்தல்: பாகிஸ்தான் கருத்துக்கு இந்தியா மறுப்பு

இந்தியாவில் சிறுபான்மையினா் துன்புறுத்தப்படுவதாக பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு
Published on

இந்தியாவில் சிறுபான்மையினா் துன்புறுத்தப்படுவதாக பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் தாஹிா் அந்த்ராபி செய்தியாளா்களை அண்மையில் சந்தித்தாா். அப்போது இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது சில இடங்களில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தாஹிா், ‘இந்தியாவில் சிறுபான்மையினா் துன்புறுத்தலை எதிா்கொள்வது மிகுந்த கவலைக்குரிய விவகாரமாகும். அந்த சம்பவங்களும், முஸ்லிம்களை குறிவைத்து இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளும் கண்டனத்துக்குரியவை’ என்று தெரிவித்தாா்.

அவரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பாகிஸ்தானில் சிறுபான்மையினா் துன்புறுத்தப்படுவதை சுட்டிக்காட்ட ஏராளமான சம்பவங்கள் உள்ளன. அந்நாட்டில் பல்வேறு மதங்களைச் சோ்ந்த சிறுபான்மையினா் கொடூரமாக அச்சுறுத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. இது பிற நாடுகள் மீது குற்றஞ்சாட்டுவதால் மறைந்துவிடாது’ என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com