

நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கேரளத்தில் நடைபெறும் 9-ஆவது கேரள இலக்கியத் திருவிழாவில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கியத் திருவிழா வரும் ஜன.22 முதல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் (60 வயது) சமீபத்தில் 300 நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்து பூமிக்கு வந்தடைந்தார்.
இந்த விழாவில் பங்கேற்கும் அவர் அறிவியல், தலைமைப் பண்பு, மீண்டு வருதல், மனிதனின் வலியைத் தாங்கும் சக்தி குறித்தெல்லாம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள இலக்கியத் திருவிழாவின் தலைமை ஒருங்கிணைப்பாளர், டிசி புக்ஸின் இயக்குநர் ரவி டீசீ கூறியதாவது:
சுனிதா வில்லியம்ஸ் கேரள இலக்கியத் திருவிழா, டிசி புக்ஸின் நலம்விரும்பி. அவர் இந்த விழாவில் பங்கேற்பது அர்த்தமுள்ளாதாக இருக்கும். அவரது வருகை பல தலைமுறைளுக்கு உத்வேகம் ஊட்டும் என்றார்.
நோபல், புக்கர் பரிசு வென்றவர்கள் உள்பட கேரள இலக்கியத் திருவிழாவில் உலகத்தில் இருந்து சுமார் 500 பேச்சாளர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த இலக்கியத் திருவிழா ஜன.22 முதல் முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.