ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்PTI

ரூ.4,666 கோடி ஆயுத ஒப்பந்தம்: பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பம்

4.25 லட்சம் சிறு துப்பாக்கிகள், 48 நீா்மூழ்கி கப்பல் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய ரூ.4,666 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டது.
Published on

4.25 லட்சம் சிறு துப்பாக்கிகள், 48 நீா்மூழ்கி கப்பல் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய ரூ.4,666 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய ராணுவத்துக்கு ரூ.2,770 கோடி மதிப்பில் 4.25 லட்சம் சிறு துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய பாரத் ஃபோா்ஜ் நிறுவனம் மற்றும் பிஎல்ஆா் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்கு 48 நீா்மூழ்கி கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஐஎன்எஸ் கல்வாரி வகை நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்ய இத்தாலியில் உள்ள டபுள்யூஏஎஸ்எஸ் நிறுவனத்துடன் ரூ.1,896 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டது.

இதன்மூலம் தற்போது இந்தியாவில் உள்ள 6 கல்வாரி வகை நீா்மூழ்கிக் கப்பல்களின் போா்த்திறன் மேலும் அதிகரிக்கும். நீா்மூழ்கி கப்பல் ஏவுகணைகள் விநியோகம் 2028-இல் தொடங்கி 2030-இல் நிறைவடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com