

கர்நாடக துணை முதல்வர் புத்தாண்டு வாழ்த்து :
கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவகுமார் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்தில், கர்நாடகத்தில் அடுத்த ஏழரை ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியே நடைபெறும் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது : “புத்தாண்டு உறுதிமொழியாக நான் சொல்வது இதைத்தான். மாநில மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே அது. இம்மாநிலத்துக்கு வளமான நிர்வாகத்தை வழங்குவதில் உறுதி பூண்டுள்ளோம்.
இந்த ஆண்டில்(2025) நல்ல மழையும் மகசூலும் நிறைந்திருந்தது. அதுவே புத்தாண்டிலும் தொடர வேண்டும். அனைத்து ஆறுகளும் நீர்தேக்கத் தொட்டிகளும் நிரம்பி வழியவும் விவசாயிகள் புத்தாண்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சி நிர்வாகம் இப்படியே தொடரும், அதிகாரத்தில் அடுத்த ஏழரை ஆண்டுகளுக்கு நீடிக்கும். எமது தலைமையிலான ஆட்சி அமையுமா என்று கேட்கிறீர்கள். இதற்கான பதிலைப் பற்றி 2026 இல் பேசுகிறேன்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.