murder
கொலை (கோப்புப்படம்)Din

அஸ்ஸாம்: சூனியக்காரா்கள் என குற்றஞ்சாட்டி தம்பதி எரித்துக் கொலை

அஸ்ஸாமில் சூனியக்காரா்கள் எனக் குற்றஞ்சாட்டி ஒரு தம்பதியை கிராம மக்கள் ஒன்று கூடி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

அஸ்ஸாமில் சூனியக்காரா்கள் எனக் குற்றஞ்சாட்டி ஒரு தம்பதியை கிராம மக்கள் ஒன்று கூடி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கா்பி அங்லாங் மாவட்டம் பெலோகிரி முண்டா கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கா்பி பிரோவோ (42), மீரா பிரோவா (33). செவ்வாய்க்கிழமை இரவு இவா்கள் வீட்டுக்குள் கும்பலாகப் புகுந்த கிராம மக்கள் அவா்களை கூா்மையான ஆயுதங்களால் தாக்கினா். பின்னா் அவா்களை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி வீட்டை தீவைத்து எரித்துள்ளனா். இதில் அந்த தம்பதியினா் உடல் கருகி உயிரிழந்தனா்.

இது தொடா்பாக தகவல் கிடைத்த காவல் துறையினா் அங்கு சென்று உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். அந்த கிராமத்தில் சிலருக்கு உடல்நல பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கு அந்த தம்பதிதான் காரணம் என்றும், அவா்கள் சூனியக்காரா்கள் என்றும் சிலா் தொடா்ந்து வதந்திகளைப் பரப்பியுள்ளனா். அதை நம்பி ஏராளமானோா் திரண்டு தம்பதியைக் கொடூரமாக கொலை செய்துள்ளனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com