

விடுமுறை என்றாலே அது ஜனவரி மாதம்தான். பள்ளிகளாக இருந்தால் மே மாதம் கோடை விடுமுறைக்கு அடுத்து அதிக விடுமுறைகளை அள்ளிக் கொடுப்பது ஜனவரிதான்.
2026ஆம் ஆண்டு புத்தாண்டாக வியாழக்கிழமை பிறக்கிறது. இந்த ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் சேர்த்து எந்தெந்த பண்டிகைகளுக்கு எந்தெந்த வங்கிகள் விடுமுறை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இங்கு வெளியாகும் தகவல் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்குமானது அல்ல, ஒவ்வொரு மாநிலத்துக்கம் ஏற்ப இது மாறுபடும் என கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 2026 விடுமுறை பட்டியல்...
ஜன. 1 : புத்தாண்டு (பெரும்பாலான மாநிலங்களில்)
ஜன. 2: மன்னம் ஜெயந்தி (ஐஸ்வால், கொச்சி, திருவனந்தபுரம் வங்கிகள்)
ஜன. 12 : சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி (மேற்கு வங்கத்தில் விடுமுறை)
ஜன. 14 : மகர சங்க்ராந்தி (மகாராஷ்டிரம், ஒடிசா, குஜராத், அசாம், அருணாசலம் மாநிலங்களில் விடுமுறை)
ஜன. 15 : பொங்கல் பண்டிகை (தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, சிக்கிம்
ஜன. 16 : திருவள்ளுவர் தினம் (தமிழகத்தில் விடுமுறை)
ஜன. 17 : உழவர் திருநாள் (தமிழகத்தில் விடுமுறை)
ஜன. 23 : வசந்த பஞ்சமி (ஒடிசா, மேற்குவங்கம், திரிபுரா)
ஜன. 26: குடியரசு நாள் (நாடு முழுவதும் அரசு விடுமுறை)
இது தவிர.. வார விடுமுறைகள்
ஜன. 10 : இரண்டாவது சனிக்கிழமை (நாடு முழுவதும்)
ஜன. 24 : நான்காவது சனிக்கிழமை (நாடு முழுவதும்)
ஜன. 4, 11, 18, 25 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை
நான்காவது சனிக்கிழமை ஜன. 31 வங்கிகள் செயல்படும்.
வங்கிப் பணிகளை பெரும்பாலும் ஆன்லைன் வங்கிச் சேவை மூலமே நடத்திக்கொள்ள முடியும் என்பதால் வங்கிகள் விடுமுறை என்றாலும் வங்கிப் பணிகள் பாதிக்கப்படாது என்றே கூறலாம்.
மேலும், இந்த தகவல்கள் பொதுவானவை என்பதால், அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளைகளை அணுகி இது பற்றி உறுதி செய்து கொள்வது நலம்.
How many days are banks closed in January 2026?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.