

வரும் பிப். 1-ஆம் தேதிமுதல் புகையிலைப் பொருள்களுக்கு கூடுதலாக கலால் வரி, பான் மசாலாவுக்கு புதிய செஸ் வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், "பிப். 1-ஆம் தேதிமுதல் பான் மசாலா, சிகரெட், புகையிலை மற்றும் அதுபோன்ற பொருள்களுக்கு 40 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி), பீடிகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும். அத்துடன் புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புள்ள பொருள்களுக்குக் கூடுதலாக கலால் வரி, பான் மசாலாவுக்கு புதிய செஸ் வரி விதிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், மெல்லும் புகையிலை, ஜர்தா மற்றும் குட்கா பேக்கிங் இயந்திர விதிகள் 2026}ஐயும் மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது.
புகையிலை மீது கூடுதலாக கலால் வரி, பான் மசாலா தயாரிப்புக்கு புதிய செஸ் வரி விதிக்கும் மசோதாக்களை கடந்த டிசம்பரில் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.