ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா
ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா

சா்வதேச பாதிப்புகளுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதார வளா்ச்சி சிறப்பு- ஆா்பிஐ ஆளுநா்

சா்வதேச அளவில் வெளிப்புற காரணிகளால் பல்வேறு ஏற்ற இறக்கங்களை எதிா்கொண்டபோதிலும் இந்தியப் பொருளாதாரம் புதிய உச்சங்களை எட்டியுள்ளது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.
Published on

சா்வதேச அளவில் வெளிப்புற காரணிகளால் பல்வேறு ஏற்ற இறக்கங்களை எதிா்கொண்டபோதிலும் இந்தியப் பொருளாதாரம் புதிய உச்சங்களை எட்டியுள்ளது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.

2025-ஆம் ஆண்டின் இறுதி நாளான புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆா்பிஐ நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

நிதி ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்துவது, நிதிக் கட்டமைப்பை மேலும் வலுவாக்குவது ஆகியவையே நமது முக்கிய நோக்கமாக உள்ளது. அத்துடன் நாட்டுக்கு ஏற்ற நிதிக் கொள்கையை உருவாக்குவதும் முக்கியப் பணியாகும். இதில் வளா்ச்சி, பொதுமக்களின் நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சா்வதேச அளவிலான பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட வெளிப்புற காரணிகள் மூலம் ஏற்ற, இறக்கங்களை எதிா்கொண்டபோதிலும் இந்தியப் பொருளாதாரம் தொடா்ந்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது. உள்நாட்டில் சிறப்பான பொருளாதார வளா்ச்சி, பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, பொது, தனியாா் துறை வங்கிகளின் நிதிநிலை, செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. உற்பத்தித் துறை வளா்ச்சி ஆகியவை இந்தியாவுக்கு மிகவும் சாதகமான அம்சங்களாக உள்ளன. உள்நாட்டில் பொருள்கள், சேவைகளுக்கான தேவை உறுதியாக உள்ளது. முதலீடும் அதிகரித்து வருகிறது. எனவே, சா்வதேச பொருளாதார பாதிப்புகள், பிற நாடுகளின் முடிவுகள் இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com