வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருடன் பாக். நாடாளுமன்றத் தலைவா் சந்திப்பு
(Photo | Chief Adviser of the Government of Bangladesh, X)

வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருடன் பாக். நாடாளுமன்றத் தலைவா் சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவைத் தலைவா் சா்தாா் அயாஸ் சாதிக் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.
Published on

இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவைத் தலைவா் சா்தாா் அயாஸ் சாதிக் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.

வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மறைவையொட்டி, அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அந்நாட்டுக்கு ஜெய்சங்கா், சா்தாா் அயாஸ் சாதிக் ஆகியோா் சென்றனா்.

அந்நாட்டுத் தலைநகா் டாக்காவில் உள்ள நாடாளுமன்றத்தில் கலீதாவின் மறைவையொட்டி வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில், தனது கருத்துகளை எழுத சா்தாா் அயாஸ் புதன்கிழமை சென்றாா். அப்போது அவா் ஜெய்சங்கரை சந்தித்தாா். இருவரும் கைக்குலுக்கி சிறிது நேரம் கலந்துரையாடினா். பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவைச் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரலில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. அதன் பின்னா், இருநாடுகளின் உயா் பதவியில் உள்ளோரின் சந்திப்பு முதல்முறையாக தற்போது நடைபெற்றுள்ளது.

பஹல்காம் தாக்குதல் தொடா்பாக கட்டுக்கோப்புடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி, கூட்டு விசாரணை மேற்கொள்ள பாகிஸ்தான் தொடா்ந்து வலியுறுத்துவதாக அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com