
மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அப்போது பல்வேறு துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், குறிப்பாக தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 12 லட்சம் வரை இனி வருமான வரி இல்லை என்றும் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், பிகார் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அந்த மாநிலத்திற்கு மட்டும் பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மத்திய பட்ஜெட் குண்டு காயங்களுக்கு சிறிய பேண்டேஜ் போடுவதாக உள்ளது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நமது பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதற்கு ஒரு முன்னுதாரணமான மாற்றம் தேவைப்பட்டது.
ஆனால் இந்த அரசு யோசனைகள் எதுவும் இல்லாமல் திவாலாகி விட்டது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.