
நாட்டின் சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் மாநிலங்களுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நடப்பாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இன்றைய நிதிநிலை அறிக்கையில் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.
பட்ஜெட் தாக்கலில் விவசாயிகளுக்கும் - சிறு நிறுவனங்களுக்கும் கடன், மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதல் இடங்கள், பொம்மை தயாரிப்பு, குறுகிய கால கடன் தொகை, புற்றுநோய் சிகிச்சை மையங்கள், பிகாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள், வருமான வரி மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாநிலங்களுடன் இணைந்து நாட்டின் முதல் 50 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும். முத்ரா கடன்கள் நீட்டிப்பு மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும்.
அத்தியாவசிய உள்கட்டமைப்பை உருவாக்க நிலம் வழங்குவதற்கு மாநில அரசுகள் பொறுப்பாகும். சுற்றுலாவை மேலும் மேம்படுத்த, முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள் உள்கட்டமைப்பு பட்டியலில் சேர்க்கப்படும். விருந்தோம்பல் மேலாண்மை நிறுவனங்கள் உள்பட நமது இளைஞர்களுக்கான தீவிர திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் வேலைவாய்ப்பு சார்ந்த வளர்ச்சியை எளிதாக்குவோம்
சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா குழுக்களுக்கு அரசு நெறிப்படுத்தப்பட்ட இ-விசா வசதிகள் மற்றும் விசா கட்டண தள்ளுபடிகளையும் அறிமுகப்படுத்தும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.