வருமான வரி சட்டம் எளிதாக்கப்படும்.
நடுத்தர வர்க்கத்தினருக்கு ரூ.12 லட்சம் வரை வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு தனி நபரின் ஆண்டு வருவாய் ரூ.12 லட்சம் வரை இருந்தால், வருமான வரி கிடையாது.
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மிகப்பெரிய மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சலுகையாக இருக்கும். அதாவது மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்குப் பெறுவார்கள்.
இதன் மூலம், வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இது ரூ.12 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.50 ஆயிரம் ஆக இருந்தது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் கூடுதலாக 75,000 ரூபாய் வரை கழிவு பெறலாம்.
வருமான வரி விகிதங்கள்
ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டியதில்லை. அனைத்து வரி செலுத்துவோருக்கும் பயனளிக்கும் வகையில் வரி விகிதம் மற்றும் வரிப் பிடித்தம் மாற்றப்படுகின்றன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மேலும்,
ஆண்டு வருமானம் ரூ. 4 லட்சம் வரை - வருமான வரி கிடையாது
ரூ. 4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5% வருமான வரி
ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை - 10% வரி
ரூ. 12 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை - 15% வரி
ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை - 20% வரி
ரூ. 20 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் வரை - 25%
ரூ. 24 லட்சத்துக்கு மேல் - 30% வரி செலுத்த வேண்டும்.
வரி செலுத்துவோருக்கு, மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு வருமானத்தைத் தவிர, அவர்கள் ஈட்டும் மாத வருவாய்க்கு வரி இல்லாத வகையில் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.