தில்லி பேரவைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது.
தில்லி பேரவைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!
Published on
Updated on
1 min read

தலைநகரான தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை காலை தொடங்கியது.

1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு 13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது.

தில்லியில் 83,76,173 ஆண்கள், 72,36,560 பெண்கள் மற்றும் 1,267 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்பட 1,56,14,000 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுடைய 2,39,905 பேர் புதிய வாக்காளர்களும் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 1,09,368 மூத்த வாக்காளர்களும் 79,885 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர்.

இந்தத் தேர்தலுக்காக சுமார் 97,955 காவல் துறையினரும் 8,715 தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். மத்திய ஆயுதக் காவல் படைகளைச் சேர்ந்த 220 குழுக்கள், 19,000 காவலர்கள் மற்றும் 35,626 தில்லி காவல்துறையினரும் ஆகியோர் அடங்குவர்.

சுமார் 3 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (பிப்.8) எண்ணப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com