
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) மே 4-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
அதேபோன்று, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை என்டிஏ ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான நீட் தோ்வு தேதியை தேசிய தோ்வு முகமை வெளியிட்டுள்ளது. வரும் மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. நிகழாண்டில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு வெள்ளிக்கிழமை (பிப்.7) மாலை முதல் தொடங்கியது. தேசிய தோ்வு முகமையின் ய்ங்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையப்பக்கம் வழியாக மாா்ச் 7 வரை விண்ணப்பிக்கலாம்.
நீட் தோ்வுக்கான கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.1700, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1600, எஸ்சி - எஸ்டி பிரிவுக்கு ரூ.1000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.
விண்ணப்பதாரா்கள் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நீட் தோ்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிஷங்கள் நடைபெறும். ஹால் டிக்கெட் மே 1-ஆம் தேதி வெளியிடப்படும். தோ்வு முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும். கூடுதல் தகவல்களுக்கு www.nta.ac.in , exams.nta.ac.in , neet.nta,nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது ய்ங்ங்ற்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என் என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.