
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அண்மையில், தனது பெண் தோழி பௌலா ஹர்ட் குறித்து பேசியிருக்கிறார்.
தற்போது 69 வயதாகும் பில் கேட்ஸ், கடந்த 2021ஆம் ஆண்டு மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸை விவகாரத்து செய்திருந்தார். இவர்களது 27 ஆண்டு கால திருமண பந்தம் விவகாரத்து மூலம் முடிவுக்கு வந்தது. அப்போதே இவர்களது விவாரத்து பேசுபொருளான நிலையில், தன்னுடைய பெண் தோழி குறித்து முதல் முறையாக பேசியிருக்கிறார் பில் கேட்ஸ்.
அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, எனக்கு பௌலா போன்ற மிக அருமையான காதலி கிடைத்திருக்கிறார். நாங்கள் இருவரும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறோம், ஒன்றாக பாரீஸ் ஒலிம்பிக் சென்றோம், இருவரும் ஒன்றாக பல அனுபவங்களை எதிர்கொண்டோம் என்று கூறியிருக்கிறார்.
பௌலா ஹர், ஆரக்கள் தலைமை செயல் அலுவலராக இருந்த மார்க் ஹர்ட் மனைவியாவார். மார்க் ஹர்ட் கடந்த 2019ஆம் ஆண்டு மரணமடைந்தார். பௌலா ஹர்ட், சமூக ஆர்வலராகவும், கொடை வள்ளலாகவும் மேம்பாட்டாளராகவும் அறியப்படுபவர்.
பில் கேட்ஸும் பௌலாவும் முதல் முறையாக 2022ஆம் ஆண்டு பொதுவெளியில் ஒன்றாகக் காணப்பட்டனர். அதன்பிறகு 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில், இவர்களது உறவை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தினர். பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும் கலந்து கொண்டனர். பாரீஸ் ஒலிம்பிக்ஸ், ஆனந்த் அம்பானி திருமணத்திலும் இவர்கள் ஒன்றாகவே வந்திருந்தனர்.
இதற்கு முன், கடந்த வாரம் பில் கேட்ஸ் அளித்த நேர்காணல் ஒன்றில், தான் செய்த மிக மோகமான தவறு என்று மெலிண்டாவை விவாகரத்து செய்ததைக் குறிப்பிட்டிருந்தார். மேலும், தற்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், விவகாரத்து முடிவு என்பது, தனக்கும் மெலிண்டாவுக்கும் மிகக் கடினமான தருணமாக இருந்ததாகவும் கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.