வாக்காளர் பெயர்ப்பட்டியல் குளறுபடிகளும் பாஜக வெற்றியும்!

தில்லி தேர்தலில் வாக்காளர்கள் பலர் கூடுதலாக இணைப்பு, நீக்கம் ஆகியவை பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகளை மாற்றியுள்ளதா?
வாக்காளர் பெயர்ப்பட்டியல் குளறுபடிகளும் பாஜக வெற்றியும்!
ANI
Published on
Updated on
3 min read

புது தில்லி : தில்லியில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக அதிகாரத்திலிருந்த ‘ஆம் ஆத்மி’ இம்முறை தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளது.

தில்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.

மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை(பிப். 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிகப்பட்டுள்ளன.

48 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக, 26 ஆண்டு கால இடைவெளிக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது பாஜக. இதனிடையே, முதல்வர் நாற்காலி யாருக்கு? என்ற போட்டியில் பல தலைவர்களது பெயர்கள் பரீசிலனையில் உள்ளன.

PTI

இன்னொருபுறம், கடந்த 2020, 2015 பேரவைத் தோ்தல்களில் முறையே 67, 62 தொகுதிகளில் வென்ற ஆம் ஆத்மிக்கு இம்முறை 22 இடங்களே கிடைத்தன. காங்கிரஸுக்கு தொடா்ந்து மூன்றாவது முறையாக எந்தத் தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை.

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது.

இத்தேர்தலில் முக்கிய குற்றச்சாட்டாக வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பெரும் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி புகார் அளித்திருந்தது கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது.

தில்லியிலுள்ள 70 தொகுதிகளிலும் கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தல் முதல் கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வரையிலான நான்கு ஆண்டு காலகட்டத்தில் மட்டும், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக 4,16,648 பேர் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனர். 

இன்னொருபுறம், கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த பிப்ரவரி வரையிலான ஏழே மாதங்களில் 3,99,362 வாக்காளர்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனர். 

அரவிந்த் கேஜரிவால் போட்டியிட்ட புது தில்லி தொகுதியில் கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தல் முதல் கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வரையிலான நான்கு ஆண்டு காலகட்டத்தில் 39,757 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த பிப்ரவரி வரையிலான ஏழே மாதங்களில் 2,209 பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. அரவிந்த் கேஜரிவால் போட்டியிட்ட இத்தொகுதியில் ஒட்டுமொத்தமாக 37,548 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

அரவிந்த் கேஜரிவால் போட்டியிட்ட தொகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைதேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த மொத்த வாக்காளர்களில் இருந்து 27.2 சதவிகிதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தில்லியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களை வாக்காளர் பெயர்ப்பட்டியலை கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த தேர்தலில் நான்கில் ஒரு வேட்பாளரது பெயர் நீக்கப்பட்டிருக்கிறது.

21,517 வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த அரவிந்த் கேஜரிவாலுக்கு இந்த தேர்தலில் பேரதிர்ச்சியூட்டும் விதமாக வெறும் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு பறிபோயுள்ளது. அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வெர்மா வெற்றி பெற்றுள்ளார்.

ANI

முண்ட்கா தொகுதியைப் பொறுத்தவரை கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் கடந்தாண்டு மே வரையிலான நான்கு ஆண்டு காலகட்டத்துடன் கடந்தாண்டு மே மாதம் முதல் இந்த பிப்ரவரி வரையிலான ஏழே மாதங்களில் ஒப்பிடுகையில், வாக்காளர்கள் எண்ணிகை உயர்ந்துள்ளது. முன்பு, 14,230 கூடுதலாக இணைகப்பட்டிருந்த நிலையில் கடந்த 7 மாதங்களில் 17,549 பேர் கூடுதலாக இணைக்கப்பட்டுளனர். ஒட்டுமொத்தமாக 31,779 வாக்காளர்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனர் முண்ட்கா தொகுதியில்.

ஆம் ஆத்மி வேட்பாளர் அனில் லாக்ரா கடந்த தேர்தலில் இத்தொகுதியில் 19,158 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை பாஜக வேட்பாளர் கஜேந்தர் தலால் 11,820 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்..

ஷாதரா தொகுதியில் கடந்த 7 மாதங்களில் 7,387 கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது, கடந்த கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் கடந்தாண்டு மே வரையிலான 4 ஆண்டுகளில் 4,564 வாக்காளர்கள் கூடுதலாக இணைக்கப்பட்டிருந்ததைவிட இது அதிகம். இத்தொகுதியில் கடந்த முறை ஆம் ஆத்மி வேட்பாளர் ராம் நிவாஷ் கோயலின் வெற்றி வித்தியாசமோ 5,294 வாக்குகள் மட்டுமே.

ANI

இத்தொகுதியில் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பெயர் இணைப்பு நீக்கம் செய்ய விண்ணப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பங்களில் பாஜகவினர் குளறுபடி செய்ததாக ஆம் ஆத்மி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும், வாக்காளர் பெயர்ப் பட்டியலில் முறையான சரிபார்த்தலுக்குப்பின்னரே பெயர்கள் இணைக்கப்பட்டிருப்பதாகவும் நீக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இவையனைத்தும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

வாக்காளர்கள் பலர் கூடுதலாக இணைப்பு, நீக்கம் ஆகியவை பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகளை மாற்றியுள்ளதா? என்கிற சந்தேகம் வலுத்தாலும், முக்கியமான பல தொகுதிகளில் ஆம் ஆத்மியின் வெற்றி வாய்ப்பு பறிபோனதற்கு இதுவுமொரு முக்கிய காரணமாகவே பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com