
ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரயாக்ராஜ் வருவதால், அப்பகுதியைச் சுற்றி 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்கவரத்து நெரிசல் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரயாக் ராஜ் நோக்கிச் செல்லும் சாலைகளில் கிட்டத்தட்ட 200 - 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நிற்பதகாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது வசந்த பஞ்சமி அன்று அதிகமானோர் நீராடுவார்கள், அதன் பிறகு கூட்டம் குறைந்துவிடும் என்பதால் பலரும் தங்களது பயணத் திட்டத்தை இந்த வாரத்துக்கு மாற்றியிருக்கலாம். அதனால் கடந்த ஒரு சில நாள்களாக வசந்த பஞ்சமி நாள்களை விடவும் அதிகக் கூட்டம் காணப்படுவதாக அங்கிருக்கும் மக்கள் கூறுகிறார்கள.
இதனால், பிரயாக்ராஜ் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மத்திய பிரதேசத்திலேயே தடுக்கப்படுவதாகவும், பலரும் மத்திய பிரதேசத்திலேயே தங்கிவிடுவதாகிவும், அடுத்த 200 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்துக் காவல்துறையினர் தடுமாறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வார இறுதி நாள்கள் என்பதால் கடந்த ஒரு சில நாள்களாகக் கூட்டம் அலைமோதியதாகவும் வெறும் 50 கிலோ மீட்டரைக் கடக்க 10 - 12 மணி நேரங்கள் ஆவதாகவும் வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள். நாங்கள் கடந்த 48 மணி நேரமாக வாகனத்திலேயே சிக்கியிருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால், பிரயாக் ராஜ் சுற்றிலும் அனைத்து சாலைகளும் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு சில நாள்களில் நிலைமை சீரடைந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.