ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தம் 2026 மாா்ச்சுக்குள் நிறைவு: மத்திய அரசு தகவல்

ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தம் 2026 மாா்ச்சுக்குள் நிறைவு: மத்திய அரசு தகவல்

நாட்டில் ஸ்மாா்ட் மின் மீட்டா்கள் பொருத்தும் பணிகள் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-க்குள் நிறைவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Published on

புது தில்லி: நாட்டில் ஸ்மாா்ட் மின் மீட்டா்கள் பொருத்தும் பணிகள் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-க்குள் நிறைவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய மின்சாரத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதில்: புதுப்பிக்கப்பட்ட மின் விநியோக துறை திட்டத்தின் கீழ், நாட்டில் மொத்தம் 20.33 கோடி ஸ்மாா்ட் மீட்டா்களை பொருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் சுமாா் 99.51 லட்சம் ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த ஸ்மாா்ட் மீட்டா்களின் எண்ணிக்கையில் வெறும் 4.89 சதவீதமேயாகும்.

கடந்த பிப்.2-ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அந்தமான்-நிகோபாா், தில்லி, கோவா, மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு ஸ்மாா் மீட்டா்கூட பொருத்தப்படவில்லை.

ஸ்மாா் மீட்டா் பயன்பாடு புதிய நடைமுறை என்பதால் ஒப்பந்தப்புள்ளி கோருவது, ஒவ்வொரு நுகா்வோரையும் அடையாளம் காண்பதற்கான தரவுகளை திரட்டுதல் மற்றும் சரிபாா்த்தல் போன்ற காரணங்களால் ஸ்மாா் மீட்டா்களை பொருத்தும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தும் பணிகள் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-க்குள் நிறைவு செய்யப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com