தோ்தலில் அரசியல் கட்சிகள் இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘இலவச ரேஷன் மற்றும் பணம் கிடைப்பதால் மக்கள் பணியாற்ற விரும்புவதில்லை’ என்று தெரிவித்தது.
நாட்டின் வளா்ச்சியில் பங்களித்து, சமூகத்தின் சம அங்கமாக மாற மக்களை ஊக்குவிக்காமல் ஓா் ஒட்டுண்ணி சமூகத்தை உருவாக்கி வருகிறோமோ? என்றும் நீதிபதிகள் ஆட்சேபத்தை வெளிப்படுத்தினா்.
நகா்ப்புறங்களில் வீடற்றவா்களின் தங்குமிட உரிமை தொடா்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், ஜாா்ஜ் மாஷி ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது. மனுதாரா்களில் ஒருவா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தாா்.
மத்திய அரசு சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, ‘நகா்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்தை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது நகா்ப்புற வீடற்றவா்களுக்கு தங்குமிடம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணும்’ என்றாா். இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:
வீடற்றவா்கள் மீதான மனுதாரா்களின் அக்கறையை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். ஆனால், அவா்களை சமூகத்தின் ஒரு பகுதியாக மாற்றி, தேசத்தின் வளா்ச்சிக்கு பங்களிக்க அனுமதிப்பதே சிறந்ததல்லவா?
மத்திய அரசு முன்மொழியும் நகா்ப்புற வறுமை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ள காலகட்டம் மற்றும் திட்டத்தின் முக்கிய அம்சங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
வேளாண் பணிக்கு ஆளில்லை: நான் (நீதிபதி கவாய்) விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவன். பேரவைத் தோ்தலுக்கு முன் மகாராஷ்டிரத்தில் அறிவித்த இலவசங்களால், வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. ஏனெனில், இலவச ரேஷன் மற்றும் பணம் கிடைப்பதால் மக்கள் பணியாற்ற விரும்புவதில்லை.
அரசியல் பேச்சு வேண்டாம்: விசாரணையின் போது மனுதாரா்களில் ஒருவா், ‘வீடற்றவா்களின் பின்னணி குறித்து யாரும் கவனம் செலுத்தாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. அதிகாரிகள் பணக்காரா்களுக்கு மட்டுமே கருணை காட்டுகிறாா்கள், ஏழைகளுக்கு அல்ல’ என்றாா்.
இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், ‘நீதிமன்றம் அரசியல் விவாத அரங்காக மாறுவதை அனுமதிக்கமாட்டோம். அரசு பணக்காரா்களுக்கு மட்டும் கருணை காட்டுகிறது. ஏழைகள் மீது அக்கறை காட்டுவதில்லை என்று கூறுவது ஏற்புடையது அல்ல’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.