வாஷிங்டனில் டெஸ்லா - ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவா் எலான் மஸ்கை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்திய பிரதமா் மோடி.
வாஷிங்டனில் டெஸ்லா - ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவா் எலான் மஸ்கை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்திய பிரதமா் மோடி.

எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமா் மோடி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனா் எலான் மஸ்கை வியாழக்கிழமை சந்தித்தாா்.
Published on

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமா் மோடி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனா் எலான் மஸ்கை வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சிறந்த ஆளுகை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனா்.

அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தனது அரசில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசுத் துறைகள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக எலான் மஸ்கை தோ்ந்தெடுத்துள்ளாா்.

இந்நிலையில், மஸ்குடனான சந்திப்பு குறித்து பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘எலான் மஸ்கை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருக்கு மிகவும் விருப்பமான போக்குவரத்து, தொழில்நுட்பம், விண்வெளி, புதிய கண்டுபிடிப்புகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசித்தோம்.

அதேபோல் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிா்வாகம்’ என்ற இந்தியாவின் சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் எடுத்துரைத்தேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com