
தில்லி ரயில் நிலையத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியானதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.
தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியான இந்த வலி மிகுந்த சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அரசு சரியான முறையில் திட்டமிட்டு நிர்வாகிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று (பிப்.15) இரவு இந்தியத் தலைநகர் தில்லியில் கும்பமேளாவிற்கு செல்வதற்கு ரயிலுக்காக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் பலியானார்கள்.
இதையும் படிக்க: ஆசிரியர்களுக்கும் சீருடை கட்டாயம்! எங்கே?
இதுகுறித்து, தனது எக்ஸ் சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் மகா கும்பமேளாவிற்கு சென்ற பக்தர்களுக்கு இந்த துன்பச் சம்பவம் தவிர்க்கப்பட்டு சரியான ஆதரவும் வசதிகளும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் இதுபோன்ற பயணங்களை பாதுகாப்பானதாகவும் அவை ஒழுங்கான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையும் உறுதி செய்வது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த பதிவில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ள அவர் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தில்லி ரயில் நிலையத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியானதற்கு ரயில்வே துறையின் தோல்வியே காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.