கும்பமேளா நீர் குளிக்க தகுதியற்றது! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்

கும்பமேளாவில் இந்த தண்ணீரிலா குளிக்கிறார்கள் மக்கள்..! மனித கழிவுகளால் ஆற்று நீர் மாசுபாடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கும்பமேளா நீர் குளிக்க தகுதியற்றது! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்
ANI
Published on
Updated on
1 min read

பிரயாக்ராஜ் : மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜில் ஆற்று நீர் மாசடைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை சுமார் 54 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தும் வருகிறது. நேற்று(பிப். 17) ஒரே நாளில் 1.36 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

கழுகுப் பார்வையில் திரிவேணி சங்கமம்
கழுகுப் பார்வையில் திரிவேணி சங்கமம்PTI

இந்த நிலையில், பிரயாக்ராஜில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை என்பது தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புனித நீரை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் பக்தர்கள்
புனித நீரை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் பக்தர்கள்ANI

கும்பமேளா ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றாலும் மாகி பௌர்ணமி உள்ளிட்ட சில முக்கிய நாள்களில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் ஆற்றில் இறங்கி புனித நீராடியுள்ளதைத் தொடர்ந்து, மேற்கண்ட நாள்களில் மனித கழிவுகள் அதிகளவில் ஆற்று நீரில் கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவற்றின் வழியே பரவும் ‘ஃபீக்கல் கோலிஃபார்ம் (எஃப் சி)’ நுண்ணுயிரிகளால் ஆற்று நீர் கடுமையாக மாசடைந்திருப்பதாகவும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டி தேசிய பசுமை தீர்ப்பாயம் திங்கள்கிழமை(பிப். 17) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com