கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக் கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வைரலான பாதகை...
வைரலான பாதகை...படம் | x
Published on
Updated on
1 min read

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடி வருகின்றனர். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி உலகின் முக்கியத் தலைவர்களும் புனித நீராடினர்.

மகா கும்பமேளா கடந்த ஜன.13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் பங்கேற்கும் பக்தர்கள் எண்ணிக்கை 55 கோடியைத் தாண்டிவிட்டது.

இதையும் படிக்க... அதிவேக 11,000* ரன்கள்..! சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

இந்தக் கும்பமேளாவில் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக வர்த்தகமாகியிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, காந்தம் மூலம் நாணயங்கள் சேகரிப்பு, வேப்பங்குச்சி விற்பனை செய்து ஓரிரு நாள்களில் 40,000-க்கும் அதிகமாக சம்பாரித்தது, ரூ.30,000-ல் ஹெலிகாப்டர் சேவை உள்ளிட்டவைகளும் மிகவும் பிரபலமாகின.

இந்த நிலையில் நூதன முறையில் ஒரு பதாகை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த பதாகையில், “144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு...! அந்த தெய்வீக கும்பமேளாவை அனுபவிக்கும் கடைசி வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். கும்பமேளாவில் புனித நீராட முடியவில்லையா? கீழ்க்காணும் எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் ரூ.500-உடன் உங்கள் புகைப்படமும் அனுப்பிவையுங்கள்.

உங்கள் புகைப்படத்தை நகல் எடுத்து புனித நீரில் நனைத்து, உங்களுக்கு புண்ணியம் கிடைக்க வழிசெய்வோம். உங்கள் ஆன்மாவை சுத்தப்படுத்துங்கள். நீங்கள் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். உங்கள் முன்னோர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்கள். இந்தத் தருணம் உங்கள் வாழ்நாளில் மீண்டும் வராது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கும்பமேளாவில் புனித நீராடும் பெண்களை விடியோ எடுத்து, ஆபாச இணையதளங்களில் விற்பனை செய்த நிகழ்வுக்கு மத்தியில் இந்தச் சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க... முகமது அசாருதீன் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com