
பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது சில பெயர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என இரு பாலருக்கும் வைக்கக் கூடிய பெயர்களாக இருக்கும். அதில் ரமணி, பாலா, ஸ்ரீ போன்றவை அடங்கும். ஆனால் இரு பாலருக்கும் வைக்கக் கூடிய பெயர்களில் ஸ்ரீ என்பதை 88 சதவீத ஆண்களும் 12 சதவீத பெண்களும் வைத்திருக்கிறார்களாம்.
கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான தகவலின்படி, இந்தியாவில் அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்றால் அது ராம். உண்மையில் பலருக்கும் இது ஆச்சரியத்தைத் தரலாம். பிறகு யோசித்துப் பார்த்தால், நமக்கே ஒரு நான்கு ராம்களைத் தெரிந்திருக்கும். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவில் 56 லட்சம் பேர் ராம் என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்.
ராம் என்பது வெறும் கடவுள் பெயர் மட்டுமல்ல, ஆன்மிகப் பெயர், பலம், பக்தி என பல அடிப்படை விஷயங்களைக் கொண்டிருக்கிறது. எனவேதான் காலங்களைக் கடந்தும் ராம் என்ற பெயரை பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு சூட்டிக்கொண்டே இருக்கிறார்களாம்.
அடுத்த இடத்தில் இருக்கும் பெயரைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கலாம். அது முகமது என்பதுதான். நாட்டில் இந்தப் பெயரை 42 லட்சம் பேர் வைத்திருக்கிறார்கள். இஸ்லாமிலும் முகமது என்பது கொண்டாடப்படும் பெயர்தான்.
அது போல வட இந்தியா என்று எடுத்துக் கொண்டால் சஞ்சய் என்ற பெயர் அதிகம் பிரபலமாம். 31 லட்சம் பேருக்கு இந்தப் பெயர் இருக்கிறதாம். அடுத்த பிரபலமான பெயர் சுனில் என்பதுவாம். அதற்கடுத்த இடத்தில் இருப்பது ராஜேஷ் என்ற பெயர் என்கிறது தரவுகள்.
பெண்களில் அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக சுனிதா உள்ளதாம். 40 லட்சம் பேர் இந்தப் பெயரைக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல பெண்களின் பெயரில் அனிதா என்ற பெயர் அதிகம் பிரபலமாம். நாட்டில் 1,347 பேரில் ஒருவருக்கு அனிதா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். அதற்கடுத்த இடத்தில் இருப்பது கீதா.
உலகிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்றால் அது முகமது. இந்தப் பெயரை கிட்டத்தட்ட 13.33 கோடிப் பேர் வைத்திருக்கிறார்கள். மரியா என்ற பெயரை 6.11 கோடிப் பேர் வைத்திருக்கிறார்களாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.