
மருத்துவமனையில் பெண்களை பரிசோதிக்கும் அறையில் இருந்த சிசிடிவியில் பதிவான விடியோக்களைத் திருடி அதனை விற்பனை செய்து வந்த சம்பவத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் மகாராஷ்டிரத்தில் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
இதில் மிக அதிர்ச்சி தரும் சம்பவம் என்னவென்றால், இவர்கள் இதுபோன்ற விடியோக்களை விற்பனை செய்ய 22 டெலிகிராம் சானல்களை வைத்திருந்தததும், பெண்களின் விடியோக்களை விற்று ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை பணம் ஈட்டியதும் தெரிய வந்துள்ளது.
மேகா டெமோஸ் குழுமம் என்ற பெயரில் ஒரு போலியான நிறுவனம் போல பதிவு செய்து, அதில் சானல்களை துவக்கியிருக்கிறார். அதற்கு சிசிடிவி இன்ஜெக்ஷன் குழுமம், லேபர் ரூம் இன்ஜென்க்சன் குழுமம், கங்கா ரிவர் ஓபன் பாத்திங் குழுமம் என சானல்களுக்குப் பெயர் வைத்து அதில் அந்தந்த விடியோக்களை பதிவேற்றம் செய்திருக்கிறார்.
இதில் மிக மோசமானது என்னவென்றால், வெளியான பாதி விடியோக்கள், மருத்துவமனையில் பெண்களை பரிசோதனை செய்யும் அறைகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகள், ஊசி போடும் அறை, மகப்பேறு சிகிச்சை அளிக்கும் அறை போன்றவற்றில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான விடியோக்களும், திருமண மண்டபங்கள், பேருந்து நிறுத்தங்கள், கங்கையில் குளிக்கும் காட்சிகள் போன்றவை அடங்கியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் அகமதாபாத் நகர குற்றவியல் பிரிவு காவல்துறையினர், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பிரஜ்வால் தைலி, உ.பி.யைச் சேர்ந்த பிரஜ் பட்டில், சந்திரபிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களில் தைலி மற்றும் பட்டீல் ஒரே அறையை வாடகை எடுத்து நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்தவர்கள் என்பதும், ஒவ்வொரு விடியோவுக்கும் ரூ.800 முதல் ரூ.2000 வரை பணம் பெற்றுக்கொண்டு விடியோக்களை பதிவேற்றியிருக்கிறார்கள்.
ராஜ்கோட் மருத்துவமனையில் இருந்த பெண்கள் சிகிச்சை பிரிவு மற்றும் கர்ப்பிணிகள் பரிசோதனை அறையின் சிசிடிவி காட்சிகள் வெளியான சம்பவத்தைத் தொடர்ந்து, சைபர் பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில்தான் இவர்கள் மூவரும் கைதாகினர்.
இவர்களுக்கு மருத்துவமனையின் விடியோக்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.