புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவிய பிரதமர் நரேந்திர மோடி
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவிய பிரதமர் நரேந்திர மோடிகோப்புப் படம்

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜெ.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா கூறினார்.
Published on

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா கூறினார்.

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்வில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ``காசி-தமிழ் சங்கமம் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு இந்தியா, சிறந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் சக்திவாய்ந்த அடையாளம். இந்த நிகழ்வு நமது வளமான கலாசார பாரம்பரியத்தை ஒரே மேடையில் அனைவரும் இணைந்து பரிமாறிக்கொள்வதற்கான ஒரு கொண்டாட்ட நிகழ்வு.

1947 ஆம் ஆண்டில் சுதந்திரத்தின்போது, ஆங்கிலேயர்களிடமிருந்து அதிகாரப் பரிமாற்றத்தைக் குறிக்கும் சோழ சகாப்த சின்னமான செங்கோலை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகத்தில் வைத்தார்.

ஆனால், அதனை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், அதன் பெருமைக்குரிய இடத்தில் வேத முறையின்படி பிரதமர் மோடி நிறுவினார். நாட்டின் நான்கு திசைகளிலும் கலாசார ஒற்றுமையை நிலைநாட்ட பிரதமர் மோடி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com