
தெலங்கானாவில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தின் இடிபாடுகளுக்குள் 7 பேர் சிக்கியுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர்வரையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் 43 பேர் வெளியே மீட்கப்பட்டாலும், 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
சுரங்கப்பாதை 10 மீட்டருக்குமேல் இடிந்து விழுந்துள்ளதாகவும், 200 மீட்டருக்குமேல் சேறு பரவியுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுரங்கத்தின் மேல்புறம் 3 மீட்டர் தொலைவுக்கு திடீரென இடிந்து விழுந்ததில், உள்ளிருந்தவர்கள் தப்பித்து வெளிவந்தனர்.
இருப்பினும், சுரங்கத்தின் மற்றொரு பகுதியில் இருந்தவர்கள் துரதிர்ஷ்டவசமாக உள்ளேயே சிக்கிக் கொண்டனர். உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.