ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தெலங்கானா கோயிலில் நாட்டின் மிக உயரமான தங்க கோபுரம்

News image

தெலங்கானா கோயிலில் நாட்டின் மிக உயரமான தங்க கோபுரம்

படங்கள்: எக்ஸ் / ரேவந்த் ரெட்டி

Updated On :23 பிப்ரவரி 2025, 10:51 pm

Din

தெலங்கானா மாநிலத்தின் யாதகிரிகுட்டாவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கோபுரத்துக்கு முதல்வா் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில், ‘தங்க முலாம் பூசப்பட்ட புதிய கோபுரத்துடன் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயிலின் மகா கும்பாபிஷேக நிகழ்வில் முதல்வா் ரேவந்த் ரெட்டி பங்கேற்றாா். தங்க முலாம் பூசப்பட்ட இக்கோயிலின் 50.5 அடி உயர கோபுரம், இப்போது நாட்டிலேயே மிக உயரமானது. இதற்காக 68 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பின்னா், ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்த முதல்வா் ரேவந்த் ரெட்டி, வேத பண்டிதா்களிடம் ஆசி பெற்றாா். வானமாமலை மடத்தின் 31-ஆவது பீடாதிபதியான ராமானுஜ ஜீயா் சுவாமிகள் தலைமையில் கோயில் கும்பாபிஷேக சடங்குகள் நடைபெற்றன’ என்று தெரிவிக்கப்பட்டது.

கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட அளவு 10,759 சதுர அடியாகும்.