கோப்புப் படம்
கோப்புப் படம்

திடீரென வெடித்த துப்பாக்கியால் இளம்பெண் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி வெடித்த சம்பவத்தில் தற்செயலாக வெடித்ததா அல்லது தற்கொலை முயற்சியா என்று போலீசார் விசாரணை
Published on

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி வெடித்ததில் இளம்பெண் படுகாயமடைந்தார்.

ஜம்மு-காஷ்மீரில் ராஜௌரி மாவட்டத்தில் உள்ள ஷிவானி (21) என்பவர், தனது துப்பாக்கியை வைத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில் ஷிவானி படுகாயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஷிவானிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், துப்பாக்கி தற்செயலாக வெடித்ததா அல்லது ஷிவானி தற்கொலைக்கு முயன்றாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Dinamani
www.dinamani.com