
மகா கும்பமேளா குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பகிர்ந்தாக 140 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கும்பமேளாவுக்கு வருகை தரும் பெண்கள் பலர் குளிப்பதை பதிவு செய்து அந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், காவல் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. சமூக விரோதிகள் அநாகரிக செயல்களில் ஈடுபடாமலிருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கும்பமேளா குறித்து தவறான மற்றும் திசைதிருப்பும் தகவல்களைப் பகிர்ந்துள்ள சமூக ஊடக நிர்வாகிகள் 140 பேர் மீது 13 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக மகா கும்பமேளா காவல் துறை டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், மகா சிவராத்திரியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும், மகா கும்பமேளா நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலிருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் புனித நீராடியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.