திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

கும்பமேளாவுக்கு பக்தர்கள் வர வேண்டாம்! - பிரயாக்ராஜ் மக்கள் கோரிக்கை!
போக்குவரத்து நெரிசலில் திணறும் பிரயாக்ராஜ் சாலை..
போக்குவரத்து நெரிசலில் திணறும் பிரயாக்ராஜ் சாலை.. படம் | பிடிஐ
Published on
Updated on
2 min read

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனர். இதுவரை 60 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர். இந்த நிகழ்வின் முக்கிய விழாக்களான மகரசங்கராந்தி, மௌனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகியவை நிறைவு பெற்றபோதிலும் உலகெங்கிலும் இருக்கும் பக்தர் அதிகளவில் திரண்டு வந்து புனித நீராடிவிட்டுச் செல்கின்றனர். மேலும், மௌனி அமாவாசையன்று மட்டும் 8 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகரசங்கராந்தியன்று 3.5 கோடி பக்தர்களும் வசந்த பஞ்சமியன்று 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடினர்.

இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புனித நீராடினர். அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு போக்குவரத்தும் தடைபடுகிறது.

இதையும் படிக்க: நின்றபடியே வேலை பார்ப்பவரா நீங்கள்? அப்போ, இது உங்களுக்குத் தான்!

இதனைக் கண்டித்து உத்தரப் பிரதேசத்தில் இருந்து சமூக ஊடகவாசி ஒருவர் ரெட்டிட் இணையத்தில் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், “இது எங்கு தொடங்கியது எனத் தெரியவில்லை. பிரயாக்ராஜ் ஒரு முடிவை எட்டியுள்ளது. இதனால், உள்ளூர்வாசிகள் எவ்வாறு வாழ்வது என்று தெரிவில்லை.

கும்பமேளாவுக்கான வேலைகள் கடந்தாண்டில் இருந்து பார்க்கப்பட்டு வருகின்றன. சாலைகள் தோண்டப்பட்டன. புதியதாக பாலங்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு மூலையும் அழகுபடுத்தப்பட்டது.

இருப்பினும், கும்பமேளா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரயாக்ராஜ் மக்களும் நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்து வரும் பக்தர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியாக உள்ளனர். இருப்பினும், அதிகரித்து வரும் கூட்டம் மக்களின் அன்றாட வாழ்க்கை நடத்துவதை கடினமாக்கியுள்ளது.

நாங்கள் 2 மாதங்களாக எங்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி இருக்கிறோம். எப்போது கூட்டம் தீரும் என்று காத்திருக்கிறோம். 2 கி.மீ போக்குவரத்து நெரிசலில் சிக்கி அதிலிருந்து வெளிவர ஒரு மணி நேரம் ஆனது. கடவுளை நேசிப்பவர்கள் தயவு செய்து இங்கு வரவேண்டாம். கங்கையும், திரிவேணி சங்கமும் எங்கும் சென்றுவிடாது. பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வருவதை நிறுத்திக்கொள்ளுங்கள். கூட்டம் குறைந்த பின்னர் நீங்கள் அமைதியாக வந்து நீராடலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com