பிகாரின் அடுத்த முதல்வரை மக்கள் முடிவு செய்வர்: ராப்ரி தேவி

தேஜஸ்வி பிகாரின் அடுத்த முதல்வரா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று அவரின் தாயாரும் பிகாா் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.
ராப்ரி தேவி (கோப்புப்படம்)
ராப்ரி தேவி (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தேஜஸ்வி பிகாரின் அடுத்த முதல்வரா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று அவரின் தாயாரும் பிகாா் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாட்னாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேஜஸ்வி யாதவ் அடுத்த முதல்வராக வருவாரா இல்லையா என்பது மக்கள் கையில்தான் உள்ளது. தலைவர்கள் கையில் கிடையாது. தேஜக கூட்டணியினர்தான் ஒவ்வொரு குற்றத்தையும் செய்கிறார்கள்.

நாங்கள் பயப்படவில்லை, நாங்கள் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம். நாங்கள் எங்கும் ஓடவில்லை, நாங்கள் நிரபராதிகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக இன்று தேஜஸ்வி யாதவ், பிகாரின் அமைச்சரவை விரிவாக்கத்தை கடுமையாக விமர்சித்தார். பிகார் மக்கள் மாநிலத்தில் காலாவதியான அரசை விரும்பவில்லை.

கணவரை விவாகரத்து செய்த வாரிசு பட நடிகை!

புதிய வாகனத்தை(அரசை) விரும்புகிறார்கள் என்று கூறினார். ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத், அவரின் மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ், மகள் ஹேமா யாதவ் ஆகியோருக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியது.

ஏற்கெனவே, மாட்டுத் தீவின ஊழல் வழக்குகள் சிலவற்றில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த லாலு, இப்போது உடல்நலப் பிரச்னைகள் காரணமாக ஜாமீனில் வெளியே உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com