கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ராஜஸ்தான்: ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

ஆழ்துளைக் கிணற்றில் 10 நாள்களாக உயிருக்குப் போராடிய 3 வயது குழந்தை உயிரிழப்பு...

News image

PTI

Updated On :1 ஜனவரி 2025, 3:58 pm

DIN

ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானின் கோட்புட்லி - பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விளைநிலத்தில் கடந்த டிச.23 அன்று விளையாடிக் கொண்டிருந்த சேத்துனா என்ற 3 வயது பெண் குழந்தை அங்கு தோண்டப்பட்டிருந்த 150 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. ஆரம்பத்தில் கயிற்றால் கட்டப்பட்ட இரும்பு வளையத்தைப் பயன்படுத்தி சிறுமியை மீட்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இதைத் தொடர்ந்து குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே சுமார் 160 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு குழந்தையை உயிருடன் மீட்க தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நிலத்துக்கு கீழே கடினமான பாறைகளைத் துளைக்கும் சவாலான பணிகளை மேற்கொண்ட மீட்புப்படையினர், குழந்தையை மீட்கும் பணியில் இரவு பகல் பாராமல் கடந்த 10 நாள்களாக ஈடுபட்டிருந்தனர். இந்த மீட்புப்பணி 10-ஆவது நாளாக புதன்கிழமையும்(ஜன. 1) நீடித்தது.

இந்த நிலையில், அந்த குழந்தை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து இன்று(ஜன. 1) மாலை வெளியே மீட்கப்பட்டது. மீட்கப்பட்டவுடன் குழந்தையை மருத்துவச் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

குழந்தையை வெளியே மீட்டுக் கொண்டு வரும் போதே, அதன் உடலில் எவ்வித அசைவுமில்லை என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டபின், அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆழ்துளைக் கிணற்றிலிருந்து புத்தாண்டு நாளில் குழந்தை மீட்கப்பட்ட தகவல் ஆறுதலைத் தந்திருந்த நிலையில், அந்த குழந்தை உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.