
மனைவியின் உடல் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் உரிமைகளில் கணவன் தலையிடக் கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழமைவாத மனநிலையை கணவன்கள் கைவிட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மனைவியின் அனுமதியின்றி அந்தரங்க செயல்களை ரகசியமாக விடியோ பதிவு செய்து அதனை சமூகவலைதளத்திலும் உறவினர்களுக்கும் பகிர்ந்த கணவன், மனைவி மீது குற்றம் சாட்டி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோத் திவாகர், மனைவி என்பவள் கணவரின் நீட்சி அல்ல. அவருக்கு தனிப்பட்ட உரிமைகள் உள்ளன. அவரின் உடல் மீதான கவனிப்புக்கும் தன்னாட்சிக்கும் மதிப்பளிக்க வேண்டும். மனைவியின் தனிப்பட்ட உரிமை அளிப்பது என்பது சட்டப்பூர்வமானது மட்டுமல்ல சமமாகக் கருதும் கணவன் - மனைவி உறவில் தார்மீகமானது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இதையும் படிக்க | மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மன்மோகன் சிங் பெயர்: மோடிக்கு கடிதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.