
பாஜகவினர் அனுப்பியது போல பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் ஒரு லிங்க், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது உண்மையல்ல, அந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் வங்கிக் கணக்கிலிருக்கும் பணம் மோசடி செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுன் படத்துடன், மத்திய அரசின் அடையாளங்களும் இணைக்கப்பட்டு, ரூ.675 அல்லதுரூ.5000 உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். உங்கள் கணக்கில் வர கார்டை ஸ்கிராட்ச் செய்யவும் என்று ஒரு தகவலுடன் சமூக வலைதளங்களில் பலருக்கும் இந்த லிங்க் பகிரப்பட்டு வருகிறது.
மேலும், பாஜதிய ஜனதா கட்சியிலிருந்து இந்திய மக்கள் அடினவருக்கும் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.5000 வரை இலவசமாக வரவு வைக்கப்படும் என்றும் தாமரை சின்னத்துடன் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லிங்க்த் தவறியும் யாரேனும் கிளிக் செய்துவிட்டால், அந்த செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கிலிருந்து பணம் வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுவிடும் அல்லது அந்த செல்போனில் உள்ள விவரங்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.
போனில் அழைத்து, எதையோ சொல்லி ஓடிபி எண் வாங்கி அதன் மூலம் மோசடி நடந்து வந்தது குறித்து காவல்துறையும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில் தற்போது, பல்வேறு வழிகளில் மோசடிகள் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு மோசடியும் வெளிச்சத்துக்கு வரும்போது உடனடியாக காவல்துறை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் அதற்குள் ஒரு சில ஏமாந்தும் விடுகிறார்கள். மோசடியாளர்கள் அடுத்து புதிய மோசடியையும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.
தற்போது, பாஜக பெயரில் ஒரு லிங்க் அனுப்பப்பட்டு வருகிறது என்றும், அதில் நம் வங்கி விவரங்கள் பெறப்பட்டு அதன் மூலம் மோசடி நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், முன்பின் தெரியாத எண்களிலிருந்து எண் ஒன்றை அழுத்தவும் என்று வந்தால் அந்த அழைப்புகளை தவிர்த்துவிட வேண்டும் என்றும் இது குறித்து 1930க்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.